--- title: கருப்புச் சட்டைக்காரன் date: 2011-04-07T00:00:00.000Z categories: - கவிதைகள் tags: - கவிதை - தமிழ் - poem - skvsree - tamil uuid: 4e9f96f9-ee42-4427-9dcd-abe794cbd60d --- நான் கருப்புச் சட்டைக்காரன்,என் கொள்கை என்ன, ராமாயணம் படித்து பெருமாள் கோயில் இடித்தது அன்று இன்று பகுத்தறிவு பேசிக்கொண்டு தீ மிதிக்கிறேன்.   அன்று திராவிடம்,தமிழ் என் உயிர், இன்று என் பெயரன் 'தமில்' தெரியாதவன், வடக்கே மந்திரி.   கள் எதிர்ப்பு போராட்டம் அன்று, இன்று கள் தவிர மற்றெல்லாம் உண்டு.   அன்று ஈழம் தமிழனுக்கு என்று முழக்கம், இன்று தமிழ்நாட்டில் தமிழன் இலவசம் தேடும் அகதி.   இன்னும் நான் கருப்புச் சட்டைக்காரன் தான், மஞ்சள் துண்டு அணிந்த கருப்புச் சட்டைக்காரன்.