--- title: நதி தாண்டி போகுமோ date: 2011-03-04T00:00:00.000Z categories: - கவிதைகள் uuid: 9afba84e-eb98-4bdd-a3a2-64a27db3f231 --- மண்ணிலே ஆழ் துளை தோண்டி நடுநிலம் கண்டாராம் ஆங்கே மாலை வானில் தோன்றும் இளம்பரிதி நிறத்தினிலே உலோக நதியாம் அந்த கொதி திரவதிலே ஒரு மீன்கள் ஓடினவாம் சாடினவாம் இது என்ன அதிசயம் என்று எரியா வலை கொண்டு பிடித்தனராம் நொடியினிலே துடித்து விரைத்தனவாம் கயல்கள் நதி எரிந்தாலும் மீன்கள் நதி தாண்டி போகுமோ அது போல பெண்ணே என் நெஞ்சமெனும் எரிகுழம்பிலே உன் மேல் வைத்த காதலெனும் மீன் ஓடுதடி அதை வலை கொண்டு பிடித்திட்டால் கயல் மட்டுமல்ல என் உயிரும் சாகுமடி