--- uuid: e8f3deb9-78e3-408b-909a-603c02b6d661 title: பறக்கும் மனிதன் --- காற்றினிலே பறக்கும் எறும்பு போல் நுண்ணறிவிலே பறக்கும் மனிதன் உடுக்கும் ஆடையும் உண்டியும் மாற்றிடும், விற்றிடும் இணையத்தில் சறுக்கும் பதிவுகளிலே தாவி தாவி சறுக்குகிறான் அலைபேசியை துணையாக்கி தூங்க மறுக்கிறான் வாழ் துணை போல் அதை தொட்டிடுவான் தடவிடுவான் மெய்யுலகு மறந்து அதன் நிகர் நிழலினில் வாழ்ந்திட்டான் சுவாசிக்க மறந்து இணையத்தில் இணைந்திட்டான் நாளை சுவாசிக்க காற்றில்லை எனும் போது இணையமே இயற்கையென அதில் கலந்திடுவானோ