--- title: மருட்சி date: 2011-04-10T00:00:00.000Z categories: - கவிதைகள் tags: - கவிதை - தமிழ் - poem - skvsree - tamil uuid: 8c612cb9-631a-4331-b7eb-8da415704e5c --- இருண்ட அமைதி, சாளரமில்லா அறை, விடி வெள்ளி இல்லா விடியல், மொட்டை மரத்தில் ஒற்றை காகம், பாதியில் முடிந்த ஒற்றையடி பாதை, கருப்பு கண் கொண்ட கருப்பு பூனை, எரியும் பனைமரம்,  எண்ணமற்ற மனம், எலுமிச்சை எரியும் வாசம், நாய்களின் ஓலம் காற்று இல்லா கரும்பு தோப்பு, காற்று மிக்க சவுக்கு தோப்பு, பாழைடந்த கோயில் கிழவி, தெரு பித்தனின் ஆனந்த சிரிப்பு, புளியமர ஆந்தை, மோகம் கொண்ட எருது, பொறியில் மாட்டிய எலியின் கதறல், லாடம் கட்ட காத்திருக்கும் எருதின் கண்கள், தூக்கு தண்டணைக்கு காத்திருக்கும் கைதி, புலியை கண்ட மான்,  குடிகாரனின் இளிப்பு, பதின்ம வயது பெண்ணின் பயம், முடியாத கதைகள், புரியாத கவிதைகள்