--- uuid: 13303c99-eabe-4fa8-bcf8-afb2c4ca2dcb title: காப்பு id: cc2e53ba-0beb-4c07-b6ca-f52243c60f49 tags: [] pinned: false created: 2026-03-08T17:27:27.899628361+00:00 modified: 2026-03-08T17:27:47.395409447+00:00 --- # காப்பு ## காப்பு சிவனவன் சினத்தனன் அதனால் சினைத்தவன் சிறுமகன் ஆகினும் சளைத்தவன் அல்ல இவன் மலைத்தவன் ​ தினைப்புனம் காத்தவள் முதல் மறுத்தவள் கரிமுகன் கண்டு ஒறுத்தவள் காத்து கரம் பிடித்தனன் ​ அவுணர் மறத்தவம் கொண்டு பெற்ற அனைத்திவன் மறத்தவர் துணை போய் அழித்திவன் அவன் மரத்தவன் ஆகினும் விடுகிலன் ​ சேவலும் மயிலும் கொண்டிவன் விண்ணவர் மகளும் கொண்டனன் சிறுத்தவர் பெருத்தவர் கண்டிலன் மனத்தவர் நினைத்தவர் வணங்குவான் ​ வடிவுதமிழ் வடித்திட்ட வேலனவன் வடிவேலனவன் இட்ட முறை தமிழ் செய்ய வந்தவன் நான் சின்னவன் ​ கற்ற முறை சொன்ன முறை குறை இருப்பினும் பொறுத்திவன் காப்பான் சிவத்தவன் ​