title: இனியவள் (ச)மையல் date: 2011-04-02T00:00:00.000Z categories:

  1. கவிதைகள்

tags:

  1. கவிதை
  2. தமிழ்
  3. poem
  4. skvsree
  5. tamil

uuid: 86ef9843-4f96-4865-bd4a-894d18b49e26


ரத்த நிற மிளகாய் சேர்த்து கரு குறுமிளகு பொடித்து கடுகு வெடித்து நீ வைத்த காரக் குழம்பு இனிக்குதடி

கொதிக்கும் சட்டியும் முகம் சுளிக்க பழைய புளியும், பழுத்த வெண்டையும் போட்ட புளிக்குழம்பு இனிக்குதடி

பச்சை பாவற் காயை வேக வைத்து அதில் முத்து வண்ண உப்பிட்டு பாவை நீ வைத்த பாவற் கறி புண்ணியமாய் இனிக்குதடி

எல்லாம் நீ மையல் போட்டு சமையல் செய்ததால் வந்த சுவையடி என் இனியவளே !!!