title: என் முதல் தோழன் date: 2011-06-19T00:00:00.000Z categories:

  1. கவிதைகள்

uuid: a8ed530e-34f8-44a2-a503-0f77b9fd2986


20 வருடம் தோளில் சுமந்த தோழன்,
எனக்காக கோவில் படிகள் மட்டுமல்ல,
காவல் நிலைய படிகளும் ஏற தயங்காதவன்.

நான் 'பைக்' கில் செல்ல, கண்ணாடியை கூட மாற்றாத தியாகி,
என் முதலெழுத்து மட்டுமல்ல,
என் முன்னுதாரணமும் நீயே.

நாளை உன்னிலையில் நான்,
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
தந்தையர் தின வாழ்த்துக்கள்!