title: தேர்தல் date: 2011-04-02T00:00:00.000Z categories:
tags:
uuid: 474b8a38-4737-4112-897c-be935d7650e1
திரையில் முகப்பூச்சு பூசினோரெல்லாம் எதிரில் அகப்புச்சு பூசிக்கொண்டு மக்களுக்கு கரிபூசும் பண்டிகை
சனநாயகத்தை இனநாயகமாக்கி சனங்களை இலவச நாய்களாக்கும் கலியுக சகுனிகள் விளையாடும் சூது
துகிலுரிக்கும் கண்ணன்களும், சூதாடும் சீதைகளும் நாடாள ஏழை துரியோதனர்கள் காடாளும் கொடுமை இது
இனவெறியை மூட்டிவிட்டு பங்காளிகள் அடித்து கொள்ள அதை ரசிக்கும் சகுனிகளை தியாகிகள் ஆக்கும் பித்து பிடித்த தசரதர்கள்