title: நதி தாண்டி போகுமோ date: 2011-03-04T00:00:00.000Z categories:
uuid: 9afba84e-eb98-4bdd-a3a2-64a27db3f231
மண்ணிலே ஆழ் துளை தோண்டி நடுநிலம் கண்டாராம்
ஆங்கே மாலை வானில் தோன்றும் இளம்பரிதி நிறத்தினிலே
உலோக நதியாம் அந்த கொதி திரவதிலே ஒரு மீன்கள் ஓடினவாம் சாடினவாம்
இது என்ன அதிசயம் என்று எரியா வலை கொண்டு பிடித்தனராம்
நொடியினிலே துடித்து விரைத்தனவாம் கயல்கள்
நதி எரிந்தாலும் மீன்கள் நதி தாண்டி போகுமோ
அது போல பெண்ணே என் நெஞ்சமெனும் எரிகுழம்பிலே
உன் மேல் வைத்த காதலெனும் மீன் ஓடுதடி
அதை வலை கொண்டு பிடித்திட்டால் கயல் மட்டுமல்ல
என் உயிரும் சாகுமடி