title: போதை date: 2011-04-03T00:00:00.000Z categories:

  1. கவிதைகள்

tags:

  1. கவிதை
  2. தமிழ்
  3. poem
  4. skvsree
  5. tamil

uuid: 82427bea-1519-4e36-bcd2-3119b34d4bf1


அவனுக்காக நான் கடற்கரை விடுதியில் காத்திருந்தேன், அதோ வந்துவிட்டான்,

என்னை கண்டுவிட்டான், கண்களில் என்ன ஒரு ஆவல், பூவை கண்ட வண்டு போல

தாவி வந்து என்னை அள்ளினான், நெஞ்சோடு சேர்த்து அணைத்து,

என் கழுத்தில் அச்சாரமிட்டான், என் வாயோடு அவன் வாய் வைத்துபோதை கொண்டான்,

கள்ளன்! பால் குடித்த பூனை போல நழுவினான்,

மீண்டும் தனிமை

-இப்படிக்கு பீர் பாட்டில்