uuid: a68aa1cc-3418-4895-8a63-cc86576ed273 title: மாங்காய்
வேண்டும் என்றேன் எனக்கொரு மாங்காய்
அன்னை கடிந்தாள் கார்த்திகையில் மாங்காயா ?
கிடைக்குமே சந்தையில் இடைக்காய்
என்றாள் தங்கை இடக்காய்
நம் மரம் இருக்கையிலே எதற்கு எடைக்காய்
அதில் இல்லையே ஒருக்காய்
என்றேன் நான் குறுக்காய்
நீ வாயயை முதலில் குறுக்காய்
தங்கை தந்தையை அழைத்தாள் மிடுக்காய்
அவரோ கொட்டினார் கொடுக்காய்
அவள் முகமோ ஆனது கடுகாய்
அம்மா மனம் இளகினது அமுதாய்
மனதை தேற்ற கிடைத்தது மாங்காய் ஊறுகாய்
உடன் பருப்பஞ்சோறும் இனித்தது அமுதாய்