title: மாதர் தினம் date: 2011-03-04T00:00:00.000Z categories:
tags:
uuid: ed9e4855-78ba-44bf-ad5a-567dcb7106bf
கிளி என்பார் கொஞ்சும் மொழி உனது என்பார் மலர் என்பார் மயக்கும் விழி உனது என்பார் அறிவிலா பொருளும் அஃறிணையும் பெண் என ஏமாற்றும் காதலரும் பீடை என்றும் செய்த வினை என்றும் கொஞ்சும் பேய் என்றும் குழி சேர்க்கும் போதையாம், இரண்டு மன வஞ்சனையாம் என்று ஊண் துறந்த சித்தரும் உளறினாரே
தம் தலை வாசல் பெண் உதரம் என்பது மறந்து பிதற்றினரே, இப்பிணி தீர்க்கவே வந்தனரே புதுமை பெண்கள், வழக்காடவும் உயிர்பிக்கவும் மட்டுமின்றி சுடுகாட்டிலும் நின்று எந்நாளும் சுடுமண் பூசித்திரியும் சிவனுக்கு இளைத்தவள் இல்லை இந்நாள் சக்தி என்றுரைத்தனரோ ஆதாம் பின் ஏவாள் என்று எழுதி வைத்தனரே அந்த நாள் மூடர் ஆதாம் அப்பனுக்கும் முன் வந்தவள் என்று மாற்றி வைத்தனரே இந்த நாள் மாதர்
இனி அவரை துதி செய்து பிழைக்க முடியாது என்று உணர்ந்து வாரும் அவரை இந்த மாசி மாத முடிவிலே வழிபட்டு உயிர் பிழைப்போம் தென்கச்சி ஏகம்பனே
-சொந்த கவிதை எழுதுவோர் சங்கம்