title: விடிய அஞ்சும் இரவுகள் date: 2011-04-04T00:00:00.000Z categories:

  1. கவிதைகள்

tags:

  1. கவிதை
  2. தமிழ்
  3. poem
  4. skvsree
  5. tamil

uuid: 630c10e8-b5b3-4844-b960-6b379251167e


அடி வயிற்றில் தொடங்கியது அந்த பந்து,

நிமிடம் ஒரு முறை கண்களில் மோதி இருட்டியது, மிரட்டியது

கலக்கம் மனம் என்னும் மனிதன் அறியா

பொருளில் கூடாரமடித்தது, நேரம் பார்க்க கண்களும் அஞ்சின,சாளரத்தில் வாகன வெளிச்சம்

காணும் போதெல்லாம் பயப் பேய் கடித்தது

தூங்கினால் விடிந்து விடுமோ? அவளிடம் கேட்டது தவறோ,

நாளை இல்லை என்பாளோ

எனில் இதுதான் என் இறுதி இரவு, வெளியில்

வெள்ளி முளைத்து பயம் போக்கியது, ஒரு வேளை,

இரவும் விடிய பயந்து வெள்ளோட்டம் விடுகிறதோ?