நான் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கண்ணாடியில் அல்ல. என் பின்னால் நான் நின்று கொண்டிருந்தேன்.
“சனியன் ஶ்ரீதரன்” என்று என் நண்பனை திட்டினேன். அவன் ஒரு விஞ்ஞானி. பங்குனி வெயிலின் மண்டை சூடு முற்றி அவனிடம் நான் கிண்டலாக கேட்ட கேள்வி என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
ஒரு ஞாயிறு மாலை நேரம் நான் என் ஆண்ட்ராய்டை நோண்டி நோண்டி பொழுது போகாமல் ஶ்ரீதரனை பார்க்கப் போனேன். ஶ்ரீதரன் ஒரு கிறுக்கு பிடித்த விஞ்ஞானி.
இந்த ஏ.ஐ யுகத்தில் அவன் சித்தர் பாடல்களிலும் கோயில் சுவர்களிலும் விஞ்ஞானம் தேடிக் கொண்டிருந்தான். அவன் தேடுவது டைம் டிராவல். சித்தர்கள் டைம் டிராவல் செய்ததாக அவன் நம்பிக்கை. குறிப்பாக அகத்தியர் இது பற்றி எழுதியதாக கூறுவான்.
இதனாலேயே அவர்கள் முக்காலமும் அறிந்திருந்தாக அவன் எண்ணினான்.
நான் அவன் வீடு என்னும் ஆய்வகத்தில் நுழைந்த போது, ஒரு கருகும் மணம் வந்து கொண்டிருந்தது. ஒரு குடுவையில் கரும்பச்சை நிற திரவம் கொதித்து கொண்டிருந்தது.
ஆனால் அவன் யாரோ ஒருவரிடம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான். கடன்காரன் போலிருந்தது. அவன் பேசி முடித்ததும் கொத்தி