uuid: 13303c99-eabe-4fa8-bcf8-afb2c4ca2dcb title: kappu
சிவனவன் சினத்தனன்
அதனால் சினைத்தவன்
சிறுமகன் ஆகினும் சளைத்தவன்
அல்ல இவன் மலைத்தவன்
தினைப்புனம் காத்தவள்
முதல் மறுத்தவள்
கரிமுகன் கண்டு ஒறுத்தவள்
காத்து கரம் பிடித்தனன்
அவுணர் மறத்தவம்
கொண்டு பெற்ற அனைத்திவன்
மறத்தவர் துணை போய் அழித்திவன்
அவன் மரத்தவன் ஆகினும் விடுகிலன்
சேவலும் மயிலும் கொண்டிவன்
விண்ணவர் மகளும் கொண்டனன்
சிறுத்தவர் பெருத்தவர் கண்டிலன்
மனத்தவர் நினைத்தவர் வணங்குவான்
வடிவுதமிழ் வடித்திட்ட வேலனவன்
வடிவேலனவன்
இட்ட முறை தமிழ் செய்ய வந்தவன்
நான் சின்னவன்
கற்ற முறை சொன்ன முறை
குறை இருப்பினும்
பொறுத்திவன் காப்பான்
சிவத்தவன்