uuid: d5f32cb2-4cb7-483c-b5cc-3459696b0d72 title: 2. விதி தொடங்கியது


2\. விதி தொடங்கியது

அந்த இரவு முழுவதும் பிரபா 3டி ரெண்டெரிங் வேலையை மானிட்டர் செய்து கொண்டிருந்தது.
காலை எழுந்த விதிலன், ஹொலோகிராம் மேசையின் அருகே முழுவதும் பிரித்து வைக்கப்பட்டிருந்த வோட்டிங் மெஷினை நோக்கி சென்றான்.

“நேற்று நீங்கள் கவனிக்காத ஒரு விஷயம் இருக்கிறது,” என்று பிரபா தொடங்கியது.

விதிலன் அருகே வந்து நின்றான்.
“எது?”

“இன்புட் மாட்யூல், சிப், மெமரி, சர்வர் கனெக்ஷன்—all சரியாக வாலிடேட் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அவுட்புட் ஸ்டேஜ் மட்டும் முழுமையாக பரிசோதிக்கப்படவில்லை.”

விதிலன் கண்களை சுருக்கினான்.
“அதாவது… அவுட்புட் மனிபுலேஷன் சாத்தியமா?”

“ஆம். மேலும்…” என்று சிறிது நேரம் நிறுத்தியது பிரபா.

“மெஷினுக்குள் ஒரு ஹிடன் மாட்யூல் உள்ளது.”

அந்த வார்த்தை அவனுக்கு மின்னல் போல் பட்டது.

“ஹிடன் மாட்யூல்?”

“ஆம். அதிகாரப்பூர்வ டிசைனில் இல்லை.”

பிரபா ஹொலோகிராமில் ஒரு பகுதியை ஜூம் செய்தது.
பவர் ரௌட்டிங் மற்றும் அவுட்புட் லைன் இடையே, மிகச் சிறிய இடத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒரு மைக்ரோ போர்டு.

விதிலன் மெதுவாக பேசினான்.
“இதன் வேலை?”

“ரேடியோ ஃப்ரீக்வென்சி டேட்டா இன்டர்செப்ஷன்.”

ஒரு நொடி அமைதி.

“ரேடியோ வேவ்?”

“ஆம். 1980களில் பயன்படுத்தப்பட்ட அனலாக் என்கோடிங் முறைகள். லோ ஃப்ரீக்வென்சி பெர்ஸ்ட் டிரான்ஸ்மிஷன். ஷீல்டெட் என்விரான்மென்டிலும் கண்டறிய முடியாத அளவுக்கு குறைந்த சக்தியில்.”

விதிலன் உடனே புரிந்துகொண்டான்.

“அப்படின்னா… இது அவுட்கோயிங் பைட்ஸை மாற்றுது?”

“ஆம். குறிப்பாக வாக்குகள் சர்வருக்கு அனுப்பப்படும் நேரத்தில்.”

அவன் சற்று நடந்து கொண்டே சிந்தித்தான்.

“இன்புட் untouched… சர்வர் வாலிடேஷன் clean… ஆனால் அவுட்புட் தான் மாற்றப்படுகிறது…”

“Correct,” என்றது பிரபா.

“அதனால் தான் எந்த audit-லும் பிரச்சினை தெரியவில்லை.”

விதிலன் திரும்பி நின்றான்.

“இது சாதாரண டெவலப்பர் வேலை இல்லை.”

“ஆம். ரேடியோ ரிசீவர் கோடு எழுதுவது, ரியல் டைம் பைட் இன்ஜெக்ஷன் செய்வது, சர்வர் சின்க்ரனைசேஷன்—all சேர்ந்து செய்ய மிகவும் குறைந்த எக்ஸ்பெர்ட்ஸ் மட்டுமே உள்ளனர்.”

விதிலன் மெதுவாக சிரித்தான்.
“அந்த சர்வர் எங்கே இருக்கும்?”

பிரபா உடனே பதிலளிக்கவில்லை.
சில விநாடிகள் கணக்கிட்டது.

“கவுண்டிங் ஏரியாவுக்குள் இல்லை.”

விதிலன் கண்கள் விரிந்தது.

“அதான்… வாலிடேஷன் ஸ்கோப்புக்குள் வராது.”

“ஆம்.”

“அப்போ வெளியில் இருந்து சிக்னல் வரும்?”

“இல்லை. ரிசீவர் மாட்யூல் சிக்னலைப் பெறுகிறது. அதன் பிறகு மாற்றப்பட்ட டேட்டா சர்வருக்கு அனுப்பப்படுகிறது.”

“அப்போ அந்த சர்வர்?”

“மொபைல்.”

விதிலன் உடனே புரிந்துகொண்டான்.

“வீஹிக்கிள்ஸ்…”

“ஆம். கவுண்டிங் சென்டர் வெளியே நிற்கும் வாகனங்களில் மொபைல் சர்வர்கள் இயங்குகிறது.”

அவன் நேற்று பார்த்த காட்சியை நினைத்தான்—பள்ளி வளாகத்துக்கு வெளியே நின்றிருந்த சில வாகனங்கள்.

“யாரும் கவனிக்காத இடம்…”

“Exactly.”

“இன்புட் மாட்யூல் சரிபார்க்கப்படுகிறது… கவுண்டிங் சர்வர் சரிபார்க்கப்படுகிறது… ஆனால் அவுட்புட் யாரும் பார்க்கவில்லை…”

பிரபா அமைதியாக இருந்தது.

அந்த அமைதியே உண்மை.


அடுத்த சில மணி நேரங்களில் விதிலன் அனைத்தையும் உறுதிப்படுத்த ஆரம்பித்தான்.
பிரபா சிமுலேஷன் ஓட்டியது.
ரேடியோ பேட்டர்ன் அனாலிசிஸ் செய்தது.
டேட்டா டிரிஃப்ட் கணக்கிட்டது.

எல்லா முடிவுகளும் ஒரே இடத்தில் சேர்ந்தது.

“பிளாக் டீம்…” என்று மெதுவாக சொன்னான் விதிலன்.

அவன் அப்பா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.


மாலை.

தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்தது.

சோஷியல் மீடியா முழுவதும் பரபரப்பு.
நியூஸ் ஃபீட்கள் தொடர்ந்து அப்டேட் ஆகின.

“எதிர்பாராத வெற்றி…”
“வரலாற்று தீர்ப்பு…”
“டேட்டா அனாமலி இல்லை…”

விதிலன் சிரித்தான்.

“வரலாற்று மோசடி…”

அவன் தனது டெர்மினலை திறந்தான்.
அனானிமஸ் நெட்வொர்க் ரூட்டிங் இயக்கினான்.
குவாண்டம் மாஸ்கிங் செயல்படுத்தினான்.

ஒரு போஸ்ட் தயார் செய்ய ஆரம்பித்தான்.

“எலெக்ஷன் மெஷின்கள் இன்புட் அல்லது சர்வர் லெவலில் ஹாக் செய்யப்படவில்லை.
அவுட்புட் ஸ்டேஜ் ரேடியோ வேவ் இன்ஜெக்ஷன் ஒரு ஹிடன் மாட்யூல் மூலம் மாற்றப்படுகிறது.
இந்த ஹிடன் மாட்யூல் கவுண்டிங் சர்வருடன் இணைக்கப்படும் போது ஆக்டிவேட் ஆகிறது.

அவுட்புட்டை கண்ட்ரோல் செய்யும் மொபைல் சர்வர்கள் கவுண்டிங் நடக்கும் இடங்களுக்கு வெளியே உள்ள வண்டிகளில் இயங்குகிறது.
பிளாக் டீம் என்பது உண்மையே அவன் ஒரு நொடி நின்றான்.

பின் “செண்ட்” செய்தான்.


10 நிமிடங்கள்.

எதுவும் இல்லை.

15 நிமிடங்கள்.

ஒரு ரீபோஸ்ட்.

30 நிமிடங்கள்.

நூற்றுக்கணக்கான ஷேர்கள்.

ஒரு மணி நேரத்தில்—

அந்த போஸ்ட் வெடித்தது.

சோஷியல் மீடியா முழுவதும் அதே விஷயம்.

“ரேடியோ ஹாக்?”
“1980 டெக்?”
“மொபைல் சர்வர்?”

எக்ஸ்பெர்ட்ஸ் வந்து அனாலிசிஸ் செய்ய ஆரம்பித்தனர்.

சிலர் மறுத்தனர்.
சிலர் ஆதரித்தனர்.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகியது—

“பிளாக் டீம்” உலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆனது.


அதே நேரத்தில்…

ஒரு சிறிய கிராமத்தில்…

ஒரு மண் வீட்டின் முன்பு பழைய டிவி ஒளிர்ந்து கொண்டிருந்தது.

அதில் அந்த செய்தி ஓடிக் கொண்டிருந்தது.

அதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் ஜீவன்.

அவரின் பக்கத்தில் அவன் பேரன்—ஜீவன் II.

ஜீவன் II-ன் முகத்தில் சிந்தனை தெளிவாக தெரிந்தது.

அவன் ஒரு விவசாய தொழில் முனைவோர்.
கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர்.

“நிலம் இல்லாமல் மனிதன் சுதந்திரம் இல்லை…” என்று மெதுவாக சொன்னான்.

ஜீவன் அவனை பார்த்தார்.

“இதுதான் நான் சொன்னது தாத்தா… எல்லாம் ஒரே கையில் தான் இருக்கிறது.”

அந்த நேரத்தில் டிவியில் அந்த அனானிமஸ் போஸ்ட் மீண்டும் காட்டப்பட்டது.

ஜீவன் II திரும்பி தாத்தாவை பார்த்தான்.

ஜீவனும் அவனை பார்த்தார்.

ஒரு வார்த்தையும் இல்லை.

ஆனால் அந்த கண்கள்—

ஒரே கேள்வியை கேட்டது.

“இப்போ என்ன செய்யப் போகிறோம்?”

அந்த கண் பார்வையுடன் அத்தியாயம் முடிந்தது.