notes:personal:poems:விரல்_பேசி_அடிமைகள்
விரல் பேசி அடிமைகள்
ஆறடி மானிடம் தலைகுனிகிறது அரையடி அலைபேசி முன்னால்
கழுத்து வரைக்கும் காசு தேவையில்லை கைக்குள் இருக்கும் அலைபேசி போதும் அடிமையாக்க
உள்ளங்கை ரேகை அழிய போதை தேய்த்தது போய் இப்போது பெருவிரல் ரேகை அழிய தேய்க்கிறார்கள் அலைபேசியை
கழுத்தெலும்பும் இடுப்பெலும்பும் இனித்தேவையில்லை இறைவா, கைவிரல் எலும்புகள் மட்டும் போதும்
இந்த விரல் பேசி அடிமைகளுக்கு
notes/personal/poems/விரல்_பேசி_அடிமைகள்.txt · Last modified: by skvsree
