User Tools

Site Tools


notes:personal:stories:sivathavan:1_5_கயிலை

id: 954ab037-2276-411d-9c3e-1f3cf3b067fc title: 1.5 கயிலை tags: [] pinned: false created: 2026-03-24T05:40:20.668417402+00:00 modified: 2026-03-30T09:14:55.409720+00:00


1.5 கயிலை

பனி சூழ்ந்த கயிலை மலையில் போதர் குடியை தவிர வேறு எந்த குடிகளும் இல்லை. கயிலை மலையை தவிர அனைத்து மலைகளிலும் பனி மட்டுமே. கயிலையில் பல்வேறு வகையான பசுந்தாவரங்களையும் பழமரங்களையும் காணலாம். பலவிதமான விலங்குகளும், பறவைகளும் இருமந்தாலும் அவை யாவும் போதர்களுக்கு அச்சம் தருபவை கிடையாது. அவர்களின் பெரு உருவம் களிறுகளும் அஞ்சி விலகும் வகையில் இருந்தது. அரனாரை காண பல நிறை மொழி மாந்தர் வருவதுண்டு. அவர்களிடம் பல வைத்திய முறைகள் கற்றிருந்ததால் நச்சு விலங்குஅளும் தாவரங்அளும் போதர்களை பாதிப்பதில்லை. இவ்வளவு வலிமை கொண்ட போதர்கள் அமைதியான குணம் கொண்டவர்களாகவே இருந்தனர். உணவுக்கு தவிர இவர்கள் வேட்டையாடுவதில்லை. அதுவும் இரையாகும் விலங்கு அதிக துன்பத்திற்கு ஆட்படாமல் இறப்பதையே முக்கியமாக கருதினர். போதர்களுக்கு அச்சம் தருபவை அவுணர்களும் அவருடன் வரும் அருவங்களுமே. அவுணர்கள் இவர்களை விட உருவத்தில் சிறியதாக இருந்தாலும் அவர்களின் வேகமும், சோர்வடையாது தாக்கும் குணங்களுமே அவர்களை அச்சுறுத்தும் குடியினர் ஆக்கியது. அமரர் வடக்கிலிருந்து வந்த பின், தெற்கிலிருந்து அவுணர் வருகையும் அதிகமாகியது.

இருவருமே ஆயுதங்களுக்காகவும், வீரியமிக்க மூலிகைகளையும் பற்றி அறியவே அரனாரையும், கயிலையயும் நாடினர். அவுணரின் மூத்தோரான வெண்ணொளியாரும், அமரரின் ஆசானனான பெருங்காப்பானும் நிறை மொழி மாந்தர். இருவரும் அரனாரின் சீடர்கள், இடபருக்குபின் அரனாரைப் பற்றி அதிகமறிந்தவர்கள் அவர்களே. அரனாரைக் காண பல்வேறு விதமான யாளிகளும், பல்வேறு விதமான நிறைமொழி மாந்தரும் வருவதுண்டு.

சென்ற வசந்த பவுர்ணமி எப்போதும் போல இன்பமாயும் கூத்தும் கேலியுமாயும் தொடங்கியது. மலை உப்பு கொண்டு கண்டமிட்டுவைக்கப் பட்டிருந்த ஒவ்வொரு கறித்துண்டும் வெளிக்கொணரப்பட்டு சமைக்கப்பட்டது. கேழ்வரகு கஞ்சியில் புளிக்க வைத்து உண்டாக்கிய பானமும் மணக்க விருந்தும் நடந்தது.

வசந்த பெளர்ணமியின் போது பெருங்கதை சொல்லப்படும். அப்போது அவ்வாண்டு நிகழ்ந்த பெரும் நிகழ்வுகளும் சேர்த்து சொல்லப்படும். அதில் தம்பெயர் சொல்லப்பட வேண்டும் என ஒவ்வொரு போதனும் விரும்புவர். அரனார் முன் சொல்லப்படும் கதையை பெரும்போதன் சொல்லுவார். ஒருவர் பெரும்போதன் ஆவதற்கு பெருங்கதையில் மூன்று முறைக்கு மேல் சொல்லப்பட்டிருக்க வேண்டும். பெரும்போதன் இறந்ததும், அதிகம் சொல்லப்பட்டிருப்பவர் பெரும்போதன் ஆவார். பலர் சமமாக சொல்லப்பட்டிருப்பின் அரனார் முடிவு செய்வார்.

பெரும்போதன் என்பது பட்டம், அப்பட்டம் பெற்றவரை பெயர் சொல்லி அழைப்பதில்லை.

அரனார் கயிலை வந்ததிலிருந்து பெருங்கதை தொடஙகுகிறது. ஒரு பிரளயத்தின் போது பல குடிகளை காப்பாற்றி மறுகுடி செய்ததாகவும் அப்போது அவர்களுக்கு பொது மொழியாக தமிழினை உண்டாக்கியதாகவும், சமநிலை கொண்டு வரவே அவர் கயிலை வந்ததாகவும் முதல் பாடல் சொல்லியது.

சீறி புறப்பட்ட ஆழிதனை

பொறி வீசும் மலைதனை

சீர்கொண்டு நிறுத்தினை

அம்பலகோவே

குதித்து வரும் அலையிலே

சீவனெல்லாம் சிதறி போகயிலே

கொண்டு வந்து சேர்த்தாய் மலையிலே

அம்பலகோவே

பாதி புவி போனதெங்கே

மீதி புவி மலைக்குதிங்கே

குடியெல்லாம் சேர்ந்ததிங்கே

அம்பலக்கோவே

உண்ண ஊண் கொடுத்தாய்

நடக்க நாடு கொடுத்தாய்

பேச மொழி செய்தாய்

அம்பலக்கோவே

உன்னை வணங்க வழி வந்தோம்

அம்பலக்கோவே

இரும்போதனின் பாட்டனுக்கு பாட்டன் செம்போதன் ஒரு நிறை மொழி மாந்தர். போதர்களில் முதல் மாந்தர் அவர்தான். பெருங்கதையில் பலமுறை அவர் பெயர் சொல்லப்பட்டாலும் அவர் பெரும்போதன் ஆக ஊக்கம் கொள்ளவில்லை. அரனாரோடும் இடபரோடும், பலமுறை தனியாகவுமே பனிக்காடுகளில் சுற்றி திரிந்துள்ளார். அ

அப்படி ஒருமுறை தனியாக சென்றபோது அவரை கொடும்பூதம் ஒன்று அவரை துரத்தியதாகவும், அந்த

notes/personal/stories/sivathavan/1_5_கயிலை.txt · Last modified: by skvsree