notes:personal:poems:ராமாயண_வில்லன்
uuid: ba94b9ef-c4c0-455a-b0a9-54dbd8c80cea title: ராமாயண வில்லன்
இராமன் என்றோர் வில்லோன்
அவனுக்கு நீலச் சாயம்
பூசுவாரடி ஞான தங்கமே
கருமைக்கும் அஞ்சும்
ஆரியரடி ஞான தங்கமே
ஊரோர் பேச்சைக் கேட்டு
தாரத்தை தள்ளி
வைத்தானடி ஞான தங்கமே
அவள் கருவினில் இரண்டென்று
அரியாதவரடி ஞான தங்கமே
உலகினை துணைக்கு
அழைத்து ஒருவனை
வென்றானடி ஞான தங்கமே
அவன் தம்பியை
மெச்சினாரடி ஞான தங்கமே
மரத்தின் பின் நின்று
மறைந்திருந்து அம்பு
விட்டானடி ஞான தங்கமே
இவனை உத்தமன் என்றது
யாரடி ஞான தங்கமே
நீதி கூற
பரிதி வழி வந்தோம்
என்றாரடி ஞான தங்கமே
அவன் அப்பன் பெண்
தாசனடி ஞான தங்கமே
அவர் கட்டிய தாரத்தை
போற்றாமல் தீயினில்
தள்ளினாரடி ஞான தங்கமே
இவனுக்கு பெண் கொடுத்தவன்
முட்டாளடி ஞான தங்கமே
notes/personal/poems/ராமாயண_வில்லன்.txt · Last modified: by skvsree
