notes:personal:stories:காதலும்-கம்யூனிசமும்---3

title: காதலும் கம்யூனிசமும் – 3 date: 2011-06-24T00:00:00.000Z categories:

  1. தொடர்-கதை

uuid: 2f75fb28-f0b9-4cd9-8893-d81cffc6276a


1. விடுதலை

2. தேடல்

3. வெளிச்சம்

கணேசனுக்கு மண்டை வெடித்து விடும் போலிருந்தது, கல்யாண மண்டபத்தில் சாப்பிடும் போது கூட குழம்பிக் கொண்டிருந்தான்.  நேரம் காலம் புரியாமல், தனபால் அண்ணன் வேறு கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தார்.   'யார் அவள்?' 'என் பெயர் எப்படி தெரியும்?'  இந்த ஊரில் சொந்த பந்தம் கூட கிடையாதே? வீட்டுக்கு போன் பண்ணி கேட்டு விடாலாமா என்று நினைத்தான்.

'என்னப்பா ஒரே சிந்தனையா இருக்கு, மணி பதினொண்னு ஆச்சு, தூங்கலியா காலைல நாலு மணிக்கு முகூர்த்தம்', 'உன் ஆள பத்தி அப்புறம் யோசிக்கலாம்' என்று கண்ணடித்தார்.  'நீங்க வேற ஏண்ணே, அந்த புள்ள யாருனே தெரில, நானே குழம்பி போய் கிடக்கிறேன்'.  'என்னப்பா இப்படி சொல்றே காலைல உன்ன பார்த்து சிரிச்சு சிரிச்சு பேசுச்சு,  நீ என்னடா தெரியாதுனு டபாய்க்கிற.'

அவர் சொன்னது போல் காலையில் அவள் இவனை பார்த்து அடிக்கடி புன்னைகைத்து கொண்டிருந்தாள்.  'தாலி' கட்டி, பால் பழம் சாப்பிட மணமக்களை அறைக்கு அழைத்து சென்றனர்,  இவன் அறைக்குள் போகாமல் வெளியே நின்று பராக்கு பார்த்து கொண்டிருந்தான், யாரோ 'கணேசன் தானே நீ' என்று கேட்டார்கள், இவன் திரும்பி  பார்த்தான்.

அவள் தான் நின்று கொண்டிருந்தாள்.   'ஆ..ஆமா நீங்க' என்று தடுமாறினான்.  'கல்யாணி' என்று யாரோ கதவுக்கு பின்னால் இருந்து கூப்பிட்டார்கள்.   அவள் திரும்பி பார்த்து விட்டு  'வீட்ல  எல்லார்த்தையும் கேட்டதா சொல்லு' என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள்.  அவ்வளவுதான் பின் அவளை பார்க்க முடியவில்லை.

'பேரே ஒரு மப்பா இருக்குபா, உனக்கு நிஜமாவே தெரியாதா அவள, உங்க சொந்தக்கார புள்ளயா இருக்க போகுதுப்பா, ஏதாவது சங்கடம் வர போகுது', அந்த முகம் அந்த முக வெட்டு அவனுக்கு பரிச்சியமானதாய் இருந்தது.  யோசித்து கொண்டே தூங்கிவிட்டான்.

இரண்டு வாரங்கள் ஓடிற்று அவன் ரொம்ப பிசியாய் இருந்தான், பெரிய வேலை ஒன்றுமில்லை,  இரண்டு வாரத்தில் ஆறு கல்யாணங்கள் 'கவர்' செய்ய வேண்டி இருந்தது.  இவற்றிற்க்கு மத்தியில் அவளை அவன் மறக்கவில்லை.

'வெள்ளத்தனைய மலர் நீட்டம்' என்று சொல்லுவார்கள் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் தாமரை மலர் தன் தலையை வெளியே நீட்டி கொண்டிருக்கும் அதற்காக, அது வேரை வெட்டி விடுவதில்லை, அது போல வெளி வேலைகள் இருந்த போதிலும் அவன் உள் மனம் அவளை மறக்கவில்லை, அது அவனுக்கே ஆச்சர்யமாய் இருந்தது.

நேற்று பார்த்த நிலவுக்கு இத்தனை சக்தியா, என்று அவளை நினைத்தாலே அவனுக்கு கவிதையாய் வந்தது.  மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.  அவளை அதற்கு பின் பார்க்காதது கூட அவனுக்கு ஏமாற்றாமாய் இருந்தது.

அப்போது அவன் 'செல் போனில்'  பிறந்த நாள் 'அலார்ம்' அடித்தது.  அவன் நண்பன் 'சுவாமி நாதன்' பிறந்த நாள்.  அப்போதுதான் அவனுக்கு உதித்தது, அவள் யாரென்றும் புரிய ஆரம்பித்தது.  இருந்த கொஞ்ச சந்தேகமும் அவளை அடுத்த வாரம் பார்த்த போது தீர்ந்து விட்டது.

notes/personal/stories/காதலும்-கம்யூனிசமும்---3.txt · Last modified: by skvsree